விராட் கோலி சொத்து மதிப்பைக் கேட்டால் அசந்து போவீங்க!
இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் இந்திய கெப்டன் விராட் கோலி. இவருக்கு இப்போது 34 வயதாகிறது. இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
மேலும், இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் வாமிகா என்ற பொண் குழந்தையும் உள்ளார்.
சொத்து மதிப்பு
விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 இலட்சமும் ஒரு நாள் போட்டிக்கு 6 இலட்சமும் டி20 போட்டிக்கு 3 இலட்சமும் சம்பாதிக்கிறார்.
கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இந்தியன் சூப்பர் லீக் கிளப் எப்சி, டென்னிஸ் டீம், மல்யுத்த சார்பு அணி என்பவற்றிக்கும் உரிமையாளராக இருக்கிறார் இதிலும் அவருக்கு வருமானம் வந்துக் கொண்டிருக்கிறது.
மேலும், ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கெப்டனாகவும் இருக்கிறார் அதில் அவர் ஆண்டிற்கு 15 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
இதை தவிர விளம்பரங்களிலும் நடித்து சம்பாதிக்கிறார் அதில் அவர் ஒரு விளம்பர படத்திற்கு 7.5 கோடியிலிருந்து 10 கோடி வரைக்கும் சம்பாதிக்கிறார்.
அதிலும் 18இற்கும் அதிகமான ப்ராண்டுகளுக்கும் மொத்தமாக 175 கோடி ரூபாயும் கிடைக்கும். இன்ஸ்டாகிராம் பதிவிற்கு 8.9 கோடி ரூபாவும் டுவிட்டர் பதிவிற்கு 2.5 கோடியும் சம்பாதிக்கிறார்.
இதை தவிர மும்பையில் 34 கோடிக்கு மதிப்பிலான வீடும், குர்கானில் 80 கோடி மதிப்பில் இன்னொரு வீடும் இருக்கிறதாம் மேலும், சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.
இவை எல்லாம் சேர்த்து மொத்தமாக விராட் கோலியின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 1,000 கோடிக்கும் அதிகமாக செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |