டி20 உலககோப்பையில் விராட் கோலிக்கு இடமில்லையா? பிசிசிஐ விடுத்த எச்சரிக்கை!
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது. 15 வருடங்கள் கழித்து அந்நாட்டில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவவிட்டது.
இதனைத்தொடர்ந்து, ஜூலை 7-ஆம் தேதி அன்று இங்கிலாந்துக்கு எதிராக துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது.

போட்டிபோடும் வீரர்கள்
அதில், புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் பட்லர் தலைமையில் ஜேசன் ராய், மொய்ன் அலி போன்ற தரமான வீரருடன் டெஸ்ட் போட்டியை போலவே இந்தியாவை மண்ணைக் கவ்வ வைக்க இங்கிலாந்து தயாராகியுள்ளது.
ஆனால், இம்முறை இந்திய அணி அதை சமாளிக்க கேப்டன் ரோகித்தும் களமிறங்கப்போகிறார். ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என நல்ல ஃபார்மில் வீரர்களும் உள்ளனர்.
இந்திய அணியின் பவுலிங்கை இங்கிலாந்து அணி எளிதில் கணித்து விளையாடுவது தான் கவலை அளிக்க கூடிய ஒரு விஷயம்.

விராட் கோலிக்கு எச்சரிக்கை
ஒரு பக்கம் இந்திய அணியில் வீரர்களை அள்ளி குவித்து பிசிசிஐ வாய்ப்புகளை வழங்கினாலும், அவர்கள் தங்களின் முழு திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் ப்ளேயிங் 11-னில் கடும் போட்டி நிலவும் நிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் நட்சத்திர வீரரான விராட் கோலி மீது மீண்டும் பிசிசிஐ எதிர்ப்பை கிளப்பை ஆரம்பித்து இருக்கிறது.
அவருக்கு தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டும், நல்ல பயிற்ச்சிக்கான நேரம் கொடுக்கப்பட்டாலும், அவர் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட்டில் அவர் பெரிய ரன்களை குவிக்கவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள பிசிசிஐ அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான டி20, மற்றும் ஒரு நாள் போட்டியில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்தே டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவாராம்.
ஒரு வேளை திறமையை நிரூபிக்காவிட்டால் இந்திய அணியில் அவரது இடம் பரிப்போகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.