ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு இத்தனை கோடியா? அசர வைத்த விராட்கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கிரிகெட்டில் டாப்பாக இருப்பது மட்டுமில்லாமல் வெளியுலகத்திற்கும் ஹூரோவாகவே திகழ்கிறார்.
இதையடுத்து, சமூக தளமான இன்ஸ்டாகிராமில், ஒரு போஸ்ட் போடுவதற்கு அதிக தொகை பெறும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியலை HopperHQ's 2021 வெளியிட்டுள்ளது.
அதவாது, இன்ஸ்டாகிராமின் பணக்கார பிரபலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உளளார்.
இரண்டாவது இடத்தில் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ட்வெய்ன் ஜான்சன் (ராக்) உள்ளார். இவர் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.11 கோடி ஊதியமாக பெறுகிறார்.

மேலும், மூன்றாம் இடத்தில் பாப் பாடகர் அரியானா க்ரநேட் உள்ளார். இந்நிலையில், இந்த பட்டியலில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே. 19வது இடத்தில் இருக்கும் கோலி, ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.5 கோடி வாங்குகிறாராம்.
மற்ற விளையாட்டு வீரர்களில், இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதற்கு அர்ஜென்டினா கால்பந்து ஹீரோ மெஸ்ஸி 8.6 கோடியும், பிரேசிலின் நெய்மர் 6.1 கோடியும் பெறுகின்றனர். '
நம்மால் எத்தனையோ பேருக்கு இன்ஸ்டாகிராமில் நிச்சயம் அக்கவுண்ட் கூட இருக்காது. ஆனால், இங்கு ஒரு போஸ்ட்டுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் பாருங்கள்.
உண்மையில், நாம் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத வேறு உலகமும் நம்மைச் சுற்றித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும், இந்த பட்டியலில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 27வது இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.3 கோடி பெறுகிறார்.
பட்டியலில் முதல் 20 இடங்களில் இருக்கும் ஒரே இந்தியர் விராட் கோலி மட்டுமே. மொத்தம் உள்ள 395 பிரபலங்கள் பட்டியலில், விராட் கோலி தவிர, வேறு எந்தவொரு இந்திய கிரிக்கெட்டரும் இந்த பட்டியலில் இல்லை.