நார்வே நடனக்குழுவுடன் நடனமாடிய விராட் கோலி- வைரலாகும் வீடியோ
நார்வே நடனக்குழுவுடன் நடனமாடிய விராட் கோலியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விராட் கோலி மாபெரும் சாதனை
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.
சமீபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் விராட் கோலி 164 நாட்களில் 1000 ரன்கள் குவித்து விராட் கோலி சாதனைப் படைத்தார். மேலும், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் செப்டம்பர் 8ம் தேதி 24000 ரன்களை எடுத்தார்.
தற்போது, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 5 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் 1000 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார். இதனையடுத்து, 25,000 சர்வதேச ரன்களை எட்டிய 6து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மாஸா நடனமாடிய விராட் கோலி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
‘த குயிக் ஸ்டைல்’ என்ற நார்வே நடனக்குழு மும்பைக்கு வந்துள்ளது. மும்பைக்கு வந்த நார்வே நடன குழுவுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மாஸாக நடனமாடியுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
This song and dance ? #ViratKohli? pic.twitter.com/EAsfoSv2W8
— Rofl_Baba (@aflatoon391) March 15, 2023