குழந்தைக்கு 'அகாய்' என பெயர் வைத்த விராட்- அதற்கு அர்த்தம் என்னவா இருக்கும்?
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தையின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அந்த பெயரின் பெயர் அர்த்தம் குறித்த ஒரு சில தகவலும் இணையத்தில் கசிந்துள்ளன.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
இந்தியாவின் பிரபலமான துறைகளான விளையாட்டு மற்றும் சினிமாவின் சிறந்த ஜோடிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள்.
இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்திருந்தது. தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.
— Virat Kohli (@imVkohli) February 20, 2024
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் வித்தியாசமான பெயர்களை வைத்திருந்தார்கள்.
அதாவது மகளுக்கு வாமிகா எனவும் மகனுக்கு அகாய் எனவும் பெயர் வைத்துள்ளனர்.
பெயரின் அர்த்தம்
அகாய் என்ற பெயர் இந்தி வார்த்தையான ‘காயா’ என்பதிலிருந்து உருவானது. அதாவது ‘உடல்’. ஆகாய் என்றால் அவரது உடல், உடலை விட மேலானவர் என்றும் பொருள்.
துருக்கி மொழியில், ‘ஆகாய்’ என்ற சொல்லுக்கு ‘பிரகாசிக்கும் நிலவு’ என்று பொருள். இவ்வாறு இவரின் மகனின் பெயர் குறித்து இணையத்தில் பல கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் பெயருக்கான அர்த்தம் குறித்து விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.