பந்தை கொடுங்க நான் பாத்துக்கிறேன்... வெற்றியின் ரகசியத்தை உடைத்த விராட் கோலி!
இந்திய, இங்கியலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, “அணியாக நாங்கள் ஒன்றிணைந்து சிறப்பான குணாதிசயத்தை வெளிப்படுத்தினோம். நாங்கள் இங்கு தப்பிப்பிழைக்க வரவில்லை. வெற்றி பெற வந்துள்ளோம். அணியை எண்ணி பெருமை கொள்கிறேன்.
ஆடுகளம் ஃபிளாட்டாக தான் இருந்தது. பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங்கில் அசத்தினர். பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மேலும், பும்ராவின் அந்த அற்புத ஸ்பெல் ஆட்டத்தை எங்களுக்கு வெற்றியை சாதகமாக்கியது.
பந்து ரிவர்ஸ் ஸ்விங்காக தொடங்கியதும் பந்தை என்னிடம் கொடுங்கள். இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என பந்து வீசும் வாய்ப்பை கேட்டு வாங்கினார் பும்ரா. அதன் பின்னர் அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகள் டாப் கிளாஸ்.
ரோகித், ஷர்துல் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தனர். எங்களது முடிவுகள் கூட்டாகவே எடுக்கப்படுகிறது. இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.
அந்த உத்வேகம் அடுத்த போட்டியிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. இங்குள்ள ரசிகர்கள் அற்புதமானவர்கள்” என தெரிவித்துள்ளார்.