சுழன்று அடித்த சூறாவளியில் விளையாடிய ராணுவ வீரர் - திக்... திக்... வீடியோ
சுழன்று அடித்த சூறாவளியில் விளையாடிய ராணுவ வீரரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூறாவளியில் விளையாடிய ராணுவ வீரர்
அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மலையிலிருந்து கீழே குதிப்பதும், நடுக்கடலில் சாகசம் செய்வதும், பைக் ஓட்டும்போது மின்னல் வேகத்தில் செல்வதும் இதுபோன்ற செயலில் சிலர் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட ஏதாவது ஒன்று செய்வார்கள்.
சில நேரங்களில் இவர்கள் செய்யும் சாகசம் ட்ரெண்டாகி விடும். அப்படி இல்லையென்றால் இவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.
உயிருக்கு பயப்படாமல் சிலர் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடற்கரையில் அதிபயங்கரமான சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருந்தது.
மணல்கள் வான் பறந்து சுழன்றுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு ராணுவ வீரர்கள் சுழன்று அடிக்கும் சூறாவளியில் விளையாடுவதற்கு ஓடுகிறார். அவர் அந்த சூறாவளியை தொட்டுவிட்டு மீண்டும் விரைந்து ஓடி வருகிறார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்பில் மூழ்கியும், மேலும் சிலர் இதுபோன்ற காயரிங்களில் யாரும் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு கமெண்ட் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Is this real? pic.twitter.com/5UT2KEbNDB
— CCTV IDIOTS (@cctvidiots) April 27, 2023