குட்டி யானைக்காக களத்தில் இறங்கிய தாய்.... இதயத்தை நெகிழ வைத்த காட்சி!
கரடுமுரடான பாதையில் யானைக்கூட்டம் செல்வதை வைரலான வீடியோவில் காணலாம்.
யானை கூட்டம் சென்ற பாதையில் ஒரு இடத்தில் சரிவான பாதையை கடக்க நேரிடுகிறது.
பெரிய யானைகள் அந்த சரிவில் எளிதாக ஏறும், ஆனால் சிறிய யானையால் அந்த சரிவில் ஏற முடியவில்லை.
குட்டி யானை பலமுறை அந்த சரிவில் ஏற முயன்றும் அதன் கால் மீண்டும் மீண்டும் சறுக்கி விடுவதையும், பல முயற்சிகளுக்கு பிறகும் அந்த குட்டி யானையால் சரிவில் ஏற முடியாமல் போவதை வீடியோவில் காணலாம்.
குட்டி யானையின் இந்த அவாஸ்தையை கண்ட, அதன் தாய், தனது குட்டிக்கு உதவ களம் இறங்குகிறது. இந்த காட்சி இணையத்தில் உலாவி வருகின்றது.
The social bonding in elephant is one of the strongest. Mother & aunts helps the calf to come up after it slipped. pic.twitter.com/TjOzYAmxGs
— Susanta Nanda IFS (@susantananda3) January 6, 2022