Viral video: அதிர்ச்சி...ராஜநாகத்தை குளிக்க வைக்கும் நபர்
பாம்புகள் என்றால் படையை நடுங்கும் என்பார்கள். அப்படிப்பட்ட பாம்பு வீடியோக்களுக்கு சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர் கூட்டங்களே இருக்கின்றன.
ராஜநாகங்கள் தான் இருப்பத்துலயே மிகவும் நச்சுத்தன்மை கொண்ட பாம்பாகும். ஒரே கடியிலேயே மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்த கூடியது.
அப்படிப்பட்ட ராஜநாகத்தின் ஒரு வீடியோதான் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்தவகையில் ஒரு ராஜநாகத்தை சற்றும் பயமின்றி குளிக்க வைக்கும் நபர் ஒருவரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
தனது செல்லப்பிராணியை குளிக்கவைப்பது போல் அவர் அந்த பாம்பை குளிக்கவைப்பது மிகவும் ஆச்சரியமாகவும் பார்ப்பதற்கு பயமாகவும் இருக்கின்றன.
சிலிர்க்கவைக்கும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு வகையிலான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
Bathing a king cobra?
— Susanta Nanda (@susantananda3) October 17, 2023
Snakes have skin to protect & keep them clean, which they shed periodically.
So what’s the need for playing with fire? pic.twitter.com/rcd6SNB4Od
மேலும் இந்த வீடியோவில், “ஒரு நாகப்பாம்பை குளிப்பாட்டுவது அதன் சருமத்தை பாதுகாக்க உதவும். இது அந்த நாகம் தூய்மையாக இருக்கவும் உதவுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோ X தளத்தில் 10,000 பார்வைகள் மற்றும் பல்வேறு கருத்துகளுடன் பரவி வருகிறது.
இந்த தேவையற்ற செயல் குறித்து பலர் கேள்வி எழுப்பினாலும், சிலர் பாம்பு பிடிக்கும் நபரின் தைரியத்தையும் பயமின்மையையும் பாராட்டி வருகின்றனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |