ட்ரெண்டிங் பாடலை 5 நிமிடத்தில் வீணையில் வாசித்த இளம் பெண்! மிரண்டு போன இணையவாசிகள்
பொன்னியின் செல்வன் திரைப்பட பாடலை வீணையால் வாசித்து அசத்திய இளம் பெண்ணின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்ரெண்டிங் பாடல்
பொதுவாக ஒரு திரைப்படம் வரும் முன்னர் அதில் வரும் பாடல்கள் வெளியாகி பிரபல்யமாகி வரும்.
இதனை ட்ரெண்டிங் பாடலாக மாற்றி அதற்கு டிக்டாக், ரீல்ஸ் என பல வகைகளில் வீடியோவாக எடுத்து அதனை வைரலாக்கி விடுவார்கள்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வந்து பலக் கோடி ரூபாய் வசூலான நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
அதில் வரும் பிரபலமான பாடலை வீணையால் இளம் பெண்ணொருவர் வாசித்து காட்டியுள்ளார்.
வீணையால் அசத்திய இளம் பெண்
இதில் பார்க்கும் போது பாட்டின் வரிகளை அப்படியே வீணையில் வாசிக்கிறார்.
இதற்கு அவர் பல நாள் பயிற்சி எடுத்திருப்பார் என விமர்சகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி manithan முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை மில்லிக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளார்கள்.
மேலும்,“ நீங்கள் வீணை வாசிக்கும் போது அழகாக இருக்கிறது” என கமண்ட் செய்து வருகிறார்கள்.