Viral Video: ஆக்ரோஷமாக நபரை புரட்டிய எடுத்த யானை! நூலிழையில் உயிர்தப்பிய காட்சி
யானை ஒன்று நபர் ஒருவரை விரட்டி தாக்கியதையும், யானையின் தாக்குதலுக்கு பின்பு குறித்த நபர் எஸ்கேப் ஆகியுள்ள காட்சி வெளியாகி பார்வையாளர்களை மிரள வைத்துள்ளது.
நபரை தாக்கிய யானை
காட்டு விலங்குகளில் மிகவும் பெரியதாக காணப்படும் யானையைக் கண்டால் மனிதர்கள் நிச்சயம் நடுங்குவார்கள்.
தனது உருவத்தினால் எந்த மக்களை நெருங்கவிடாமல் ஒருவித பயத்திலேயே வைத்திருக்கும் யானை. சில நேரங்களில் பாகனைக் கூட தாக்குவதை நம்மால் பார்க்க முடிகின்றது.
இந்நிலையில் காடு ஒன்றில் நபர் ஒருவரை யானை ஆக்ரோஷமாக விரட்டி வந்து தாக்கியுள்ளது. குறித்த நபரை மிதித்து, உருட்டி தாக்குதல் நடத்திய நிலையில், நபர் இறந்துவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார். யானையின் தாக்குதலுக்கு பின்பு நபர் கம்பீரமாக எழுந்து சென்றதை பார்த்த நெட்டிசன்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் அவரை உருவக்கேலி செய்தும், சிலர் யானையிடம் இப்படியொரு மசாஜ் கிடைத்துள்ளதே என்றும் மீண்டும் உயிர் பிழைத்ததால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் 100 ஆண்டுக்கு லைஃப் இன்ஸுரன்ஸ் கிடைத்துளளதாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |