படுக்கையறைக்கு வந்த நாகபாம்பு - கையெடுத்து வணங்கிய பெண்... வைரல் காணொளி
வீட்டு படுக்கையறையில் பாம்பு ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த அந்த வீட்டு பெண் முருகா என் வீட்டிற்கு வந்திட்டியா என கேட்கும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
நல்ல பாம்பு கடித்தால் நமது உடலில் உடனே விஷம் பரவும். ஆனால் சில மக்கள் இன்னும் பாம்பை கண்டவுடன் கையெடுத்து வணங்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் இன்றும் கடலூரில் நடந்துள்ளது. கடலூர் முதுநகர் அருகே உள்ளது வண்டிப்பாளையம் என்ற பகுதியில் ஒரு வீட்டு படுக்கையறையில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதை பார்த்த அந்த வீட்டில் உள்ள பெண் கையெடுத்து வணங்கி 'முருகா நேற்று பூஜை செய்தேனே இன்று என் வீட்டிற்கு வந்திட்டியா!" என கேட்டு வணங்குகின்றார்.
அந்த பாம்பை ஒரு நபர் கம்பியால் எடுத்து அவ்விடத்தை விட்டு நகர்த்துகிறார்.
அந்த போத்தலிற்குள் பாம்பை அவர் அடைத்த பின்னும்ந்த குடும்பத்தினர் நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்துள்ளது.
எனவே அது சாமி என சொல்லி, டப்பாவில் அடைத்திருந்த பாம்புக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். வீட்டுக்குள் நுழைந்த பாம்புக்கு, உரிமையாளர் திடீரென பூஜை செய்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |