இயற்கையின் நடுவே நிற்கும் ஒற்றை மான்..... ஒரு நிமிடம் அப்படியே சிலிர்க்க வைக்கும் காட்சி
வனவிலங்குகள் தொடர்பாக எவ்வளவோ வைரல் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.
சில நேரங்களில் மிகவும் நகைப்பூட்டும் வகையில், சில நேரங்களில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால் அதன் செய்கைகள் அனைத்தையும் அது இருக்கும் இடத்தில் வைத்து பார்க்கும் போது அதன் அழகு என்னவோ தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
அட நாம் வாழும் உலகில் இத்தனை அழகான இடங்கள் எல்லாம் இருக்கிறதா, அதில் இத்தனை வகையான உயிரினங்கள் வாழ்கின்றதா என்பது வியப்போடு ஒரு வித ஆச்சர்யத்தை அளிக்கும்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பீகார் மாநிலம் ரோஹ்தாஸில் அமைந்திருக்கும் வயல்வெளி ஒன்றில் ப்ளாக்பக் என்ற மான் ஒன்று நின்று சுற்றி முற்றி பார்க்கும் காட்சி அத்தனை சிலிர்ப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Blackbucks of Rohtas. Holding high the baton of Indian Wildlife prospering in the agricultural landscapes of Bihar.#wildlifeweek #ForesterLife@ParveenKaswan @rameshpandeyifs@UNBiodiversity pic.twitter.com/JzVCceREmP
— Pradyumn Gaurav (@Pradyumn_IFS) October 3, 2021