பரபரப்பாக விற்கப்படும் டீசல் பரோட்டா! நெட்டிசன்களை குவித்து வரும் வைரல் வீடியோ
பரோட்டா செய்யப்படும் ஒரு இடத்தில் இருந்து நெய் எண்ணெய்க்குப்பதிலாக ஒருவர் டீசல் ஊற்றி பரோட்டா செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவை எடுத்துக்கொண்டிருக்கும் நபர் இந்த சமையலுக்கு நீங்கள் பயன்படுத்துவது என்ன எண்ணெய்? என கேட்டதற்கு சமையல் செய்தவர் எந்த விதமான பதட்டமும் இல்லாமல் சாதாரணமாக டீசல் என கூறுகிறார்.
இவர் வழமையாக பரோட்டா செய்வது போல செய்தாலும் இவர் பரோட்டாவிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் தான் மிகவும் அச்சமாக உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர் இந்த பரோட்டா கடையால் கோடீஸ்வரராக ஆகிவிடலாம் ஆனால் இவரிடம் சாப்பிட்டவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக தங்கள் சொத்தை விற்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
குறித்த இந்த வீடியோவை பதிவிட்டவர் இந்த பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சனைகள் குறித்து அக்கறையோடு கருத்து தெரிவித்துள்ளார்.