ஆவியாகிப் போகும் மாய நீர் வீழ்ச்சி - இயற்கையை விட வேறு எதுவும் அதிசயம் உண்டா?
ஆவியாகிப்போகும் நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பருவமழைக்காலம் தொடங்கிவிட்டாலே திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்படுவதை மலைகளில் பார்க்கலாம்.
வழக்கமாக இருக்கும் பெரும் நீர்வீழ்ச்சிகளில் நீர் பெருக்கெடுத்து கொட்டுவதுபோல் இந்த நீர்வீழ்ச்சிகளிலும் மழைநீர் ஆர்பரித்துக் கொட்டும்.

அந்தநேரத்தில் மலை பிரதேசங்களுக்கு நீங்கள் சுற்றுப் பயணம் செய்தால் இப்படியான அழகிய காட்சிகளை தவறாமல் கண்டுகளிக்கலாம்.
இமயமலை முதல் தென்னிந்தியா முழுவதும் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இத்தகைய கண்கொள்ளாக் காட்சிகளை நீங்கள் கண்டு ரசிக்க முடியும்.
When the magnitude of wind speed is equal & opposite to the force of gravity. The water fall at its best during that stage in Naneghat of western ghats range.
— Susanta Nanda IFS (@susantananda3) July 10, 2022
Beauty of Monsoons. pic.twitter.com/lkMfR9uS3R