ஆங்கிலத்தில் பிச்சி உதறிய 80 வயது பாட்டி! வயது என்பது வெறும் எண் மட்டுமே...மீண்டும் பார்க்க தூண்டும் காட்சி
ஆங்கிலத்தில் சரமாரியாக பேசும் பாட்டி ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நமது தாய்மொழியை தவிர்த்து மற்ற மொழியை நாம் கற்று கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன என்றே சொல்லலாம்.
குறிப்பாக உலகில் அதிக மக்கள் பேசும் மொழியான ஆங்கிலத்தை கற்று கொள்ள வேண்டும் என்று இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை முயற்சி செய்து வருகின்றனர்.
The circle of life ! ?
— Syed Sleet Shah (@Sleet_Shah) February 14, 2022
They taught us how to talk when we were babies and how the turntables ! What is even more wholesome is that learning is a consistent process in life ! ? pic.twitter.com/NxQ7EHjAwZ
இதற்கு ஏற்றாற்போல ஏராளமான வழிமுறைகளும் வந்துவிட்டன.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி நாம் எளிதில் ஆங்கிலத்தை கற்று விட முடியும். இருப்பினும் சிலருக்கு ஆங்கிலத்தை சரியான முறையில் கற்று கொள்வதில் சில சிக்கல்களும் உண்டு.
இப்படியொரு ஒரு பெரிய சவாலை தான் காஷ்மீரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் எதிர் கொண்டுள்ளார்.
இவர் அழகாக ஆங்கிலம் கற்று கொண்டு எளிமையான வார்த்தைகளை காஷ்மீர் மொழி உச்சரிப்பில் ஆங்கில மொழியை சேர்த்து உச்சரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.