விஜயாக மாறிய சிறுவன்...கிளைமேக்ஸில் வந்த சிம்ரன்! துள்ளாத மனமும் துள்ளும் படத்தையும் மிஞ்சிய காட்சி
நடிகர் விஜய் - சிம்ரன் இணைந்து நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதியுடன் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
இது இயக்குநருக்கு எழிலுக்கு முதல் படம். இந்தப் படம் காதலர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படம்.
#ThulladhaManamumThullum Climax Recreation ????#Beast @actorvijay @KVFC_Official @VijayKLTrends pic.twitter.com/SOfo7ovUdX
— Mohammed Sathick (@MDSATHICK374) February 6, 2022
குட்டியாக விஜய்யும், ருக்மணியாக சிம்ரனும் நடித்திருந்தனர்.
சிறையிலிருந்து வெளியே வரும்போது சிம்ரனிடம் தான் யார் என்று தெரிவிக்க போராடும் அந்த கிளைமேக்ஸ் ரசிகர்கள் மனதை உருக செய்யும். இந்த காட்சியை சிறுவர்கள் அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.