ஆட வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... கணவர் செய்த மோசமான காரியம்! கொதிக்கும் பார்வையாளர்கள்
தவறான நடன அசைவுகளால் கணவரிடம் அடி வாங்கிய பெண்ணின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த வீடியோவில் பல தம்பதிகள் ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருப்பதை காண முடிகின்றது.
இவர்கள் அனைவரும் ஜோடிகளாக நடனமாடுகிறார்கள். ஆனால் இவர்களில் ஒரு ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நபர் ஒருவர் தனது ஜோடியை மிக வேகமாக நடனமாட வற்புறுத்துவதைக் காண முடிகின்றது.
இதனால் டென்ஷன் ஆன அந்த பெண், தவறான நடன அசைவுகளை செய்யத் தொடங்குகிறார்.
இதைப் பார்த்த அந்த நபருக்கு கோவம் வருகிறது. கோவத்தின் மிகுதியால், அவர் தனது ஜோடியை அறையத் தொடங்குகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த ஜோடி அவரைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அவர் அடங்குவதாக இல்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.