தெருவில் பாட்டுப்பாடி சம்பாதித்த பணத்தை பசித்தவருக்கு கொடுத்து உதவிய பெண்! வைரலாகும் வீடியோ
தெருக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி சம்பாதித்த பணத்தை அருகில் இருந்த பசித்தவருக்கு அளித்த பெண்ணின் செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
லிவ் ஹார்லேண்ட் என்கிற பெண்மணி தெருக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.
அவர் பாடும் பல பாடல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவார். சில நாட்களுக்கு முன்பு எப்போதும் போல தனது இசை நிகழ்வை தெருக்களில் தொடங்கி உள்ளார்.
அந்த நேரத்தில் அருகில் இருந்த குப்பை தொட்டியில் ஒருவர் எதையோ தேடி கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார்.
உடனே தான் பாடி கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு அவர் அருகில் சென்று "நீங்கள் உங்களுக்கான உணவை வாங்கி கொள்ள நான் பணம் தருகிறேன் என்று பாடியதற்காக பிறர் செலுத்திய பணத்தில் இருந்து ஒரு பங்கை எடுத்து சென்று அவரிடம் கொடுத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.