திருமண ஊர்வலத்தில் புதுமண தம்பதியின் அட்ராசிட்டி! இணையத்தில் வைரலாகும் காட்சி
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடக்கும்.
கோடீஸ்வரர்கள் என்றால் சொல்லத்தேவையில்லை. திருமண மண்டப அலங்காரம் முதல் மண்டப்பெண் உடை, அலங்காரம் உள்ளிட்ட அனைத்திலும் பிரம்மாண்டத்தின் உச்சி எதுவோ, அதனை தொட்டுவிடுவார்கள்.
சில திருமண ஊர்வலங்கள் மட்டுமே வித்தியாசமாகவும், அனைவரது கவனத்தையும் ஈர்ப்பவையாக இருக்கும்.
#VideoViral Adventures wedding in #Hunza Valley #Pakistan pic.twitter.com/ruhMmqwPYI
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) October 1, 2021
பாகிஸ்தானில் நடைபெற்ற அப்படியான ஒரு திருமண ஊர்வலம் அனைவரது கவனத்தையும், நெட்டிசன்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
பாகிஸ்தானில் ஹூன்சா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், புதுமண தம்பதிகள் ஜேசிபி எந்திரத்தின் முன் பக்க பக்கெட்டில் நிற்கவைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.