தெரு ஓரத்தில் பாட நோட்டுகளுடன் குட்டி தேவதை! ஏழையின் செயலால் வாடி போன பார்வையாளர்களின் முகம்...
பொதுவாகவே படிப்பதற்கு நல்ல அமைதியான சூழல் வேண்டும் எனச் சொல்வார்கள்.
அதேநேரம் படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லும்போது நம் முன்னோர்கள் ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல், ‘ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேறிவிடும்’ என பாரதி தாசனும் கூறுகிறார்.
இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிச்சிறுமி நான்காம் வகுப்பு படிக்கிறார். அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு அவரை படிக்க வைக்கிறார்.
மகளோ சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து மாம்பலம் விற்கும் தன் தந்தைக்கு உதவும் நோக்கத்தில் தினமும் அவரும், அவரோடு விற்பனை செய்யும் இடத்திற்கு வந்துவிடுகிறார். ஆனால் அங்கு இருந்தும் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும், வீட்டுப்பாடங்களை எழுதவும் செய்கிறார்.
இதைப் பார்த்த அந்தப் பகுதிவாசி ஒருவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட அந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.