கோபமடைந்த கேரளா கோவில் யானை! தப்பி ஓடிய சுவாமிநாதன்...யாருடா மேளம், தாளம் வாசிச்சது?
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவில்வாமலை வில்வாத்ரிநாதர் கோவிலில் யானை ஒன்று தன் மீது அமர்ந்து இருந்த பாகனை தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது.
கேரளா கோவில்களில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளில் யானைகள் பங்கேற்கின்றன.
கடந்த வியாழன் அன்று வில்வாத்ரிநாதர் கோவிலில் நடந்த திருவிழாவின் போது யானையின் மீது ஏறி அதன் பாகன் அமர்ந்துள்ளார்.
திருவிழாவின் போது மேளம், தாளம் சத்தங்கள் கேட்கத் தொடங்கியவுடன் திடீரென கோபமடைந்த யானை தன் உடலை அங்கும் இங்கும் அசைக்க ஆரம்பித்தது. இதில் பாகன் சுவாமிநாதன் கீழே விழுந்தார்.
பின்னர் யானை திரும்பி அவரைத் தாக்க முயன்றது, எனினும், சுவாமிநாதன் பாதுகாப்பாக தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.