இளம்பெண்களை அநாகரீகமாக சித்தரித்து.. உலகளவில் சர்ச்சையை கிளப்பிய பால் விளம்பரம்
பிரபல தென்கொரியா நிறுவனம் வெளியிட்ட விளம்பரமொன்று உலகளவில் சர்ச்சையை கிளப்பியதால் திரும்ப பெறப்பட்டுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் Seoul Milk, பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தின் சமீபத்தில் விளம்பரம் உலகளவில் சர்ச்சையை கிளப்பியது.
அதில், இயற்கையை படம்பிடிக்க செல்லும் இளைஞர் ஒருவர் அங்குள்ள இளம்பெண்களை பார்க்கிறார், சுத்தமான காற்று, நீர் என இயற்கையின் அழகை ரசித்து வாழும் பெண்களை பார்க்கிறார், யோகா செய்து கொண்டும் அமைதியாக பொழுதை கழிக்கும் பெண்களை நெருங்கும் போது பசு மாடுகளாக காட்சியளிக்கின்றனர்.
இறுதியில், ”சுத்தமான நீர், இயற்கையான உணவு, 100 சதவிதிம் தூய்மையான பால்” என முடிகிறது.
இந்த விளம்பரம் வெளியான சில நாட்களிலேயே கடும் சர்ச்சையை கிளப்பியது, பலரும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் விளம்பரத்தை திரும்ப பெறுவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ யூடியூப்பில் இருந்து விளம்பரம் நீக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான விளம்பரத்திற்கு நாங்கள் ஒவ்வொரு நபரிடமும் மன்னிப்பு கோருகிறோம், இனியும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
எனினும் Seoul Milk நிறுவன பொருட்களை மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.