ராட்சத மலைப்பாம்பால் பதறியடித்து ஓடிய மக்கள்... இறுதியில் புதர்களுக்குள் மாயமான ஆச்சரியம்! வைராகும் வீடியோ
கொச்சியின் களமசேரியில் உள்ள பரபரப்பான துறைமுகம்-விமானநிலைய சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பெரிய மலைப்பாம்பு வந்ததால் அங்கு இருந்த மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
மலைப்பாம்பு பாதையில் இருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளமுள்ள இந்திய ராக் மலைப்பாம்பு இரவு 11.10 மணியளவில் KSEB அலுவலகத்திற்கு அருகிலுள்ள பரபரப்பான பகுதியில் சாலையின் குறுக்கே மெதுவாக ஊர்ந்து சென்றது.
Scene at Kochi's Seaport-Airport road Kakkanad signal last night. pic.twitter.com/NdzjL9A5x1
— Rajesh Abraham?? (@pendown) January 10, 2022
இதற்கிடையில், சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் பாம்பு ஊர்ந்து செல்லும் காட்சியை படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
மெதுவாக ஊர்ந்து சென்று சாலையோரத்தில் இருந்த புதர்களுக்குள் மலைப்பாம்பு மறைந்ததுள்ளது. இந்த காட்சி ஒரு வித அச்சத்தினையும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.