துடித் துடித்து உயிரிழந்து கிடக்கும் குட்டியை கண்ணீருடன் தடவி எழுப்பும் யானை.... இதயத்தை நொருக்கிய காட்சி
இறந்து கிடக்கும் குட்டி யானையை முட்டி எழுப்பும் தாய் யானையின் காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற குட்டி யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
யானையை மீட்கும் பணியின் போது வந்த தாய் யானை உயிரிழந்த குட்டியை தன் தும்பிக்கையால் தட்டி தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
மின் வேலியில் சிக்கி பலியான 3 வயது ஆண் யானை... தவியாய் தவிக்கும் தாய் யானை!! மனதை உருக்கும் வீடியோ!! #Elephant | #Kerala | #ViralVideo | #ZeeNewsTamil pic.twitter.com/Bi12VE2C99
— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) November 17, 2021