பெயிலாக்குவியா...பள்ளி சீருடையில் ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த மாணவர்கள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண்கள் கொடுத்த ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தும்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மதிப்பெண்களைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகமான மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்திருந்தனர்.
ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த மாணவர்கள்

மதிப்பெண்களை பார்த்த மாணவர்கள் உடனே அது குறித்து பேச வருமாறு ஆசிரியர்களை அழைத்தனர். பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை அங்கு இருந்த மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.
இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.