கதறி தேம்பி தேம்பி அழுத ஆட்டு குட்டி! நொறுங்கி போன ஓனர் - இதயத்தை துளைத்தெடுத்த காட்சி
ஆடு ஒன்று கதறி கதறி அழும் வீடியோ காண்போர் இதயத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது.
இது எந்த ஊரில் நடந்தது என்று தெரியவில்லை. குர்பானிக்காக இந்த ஆட்டை விற்பதற்காக, அதன் ஓனர் சந்தைக்கு அழைத்து வந்துள்ளார். ஒருநபர் அந்த ஆட்டை விலை பேசியுள்ளார்.
அப்போது திடீரென அந்த ஆடு, ஓனரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டது.
அந்த ஆட்டை சமாதானப்படுத்த முயன்றும் ஓனரால் முடியவில்லை.
அழுகையை ஆடு நிறுத்தவே இல்லை.
விக்கி விக்கி அழுததை பார்த்து, சந்தைக்கு வந்தவர்கள் கண்கலங்கி நின்றனர்.. ஓனரும் கண் கலங்கினார்.

இதனை பார்த்ததும் அந்த ஆட்டினை வாங்கிய நபர், பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த ஆட்டை ஓனரிடமே கொடுத்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.
அதற்கு பிறகு ஆடு அழவில்லை. நெஞ்சை பிசையும் இந்த பாசப்போராட்டத்தின் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.