அம்மாவ போலீசில் புடுச்சு கொடுத்துடலாம்- அப்பாவிடம் புகார் சொன்ன மகள்
அம்மாவ போலீசில் புடுச்சு கொடுத்துடலாம்ன்னு அப்பாவிடம் மகள் புகார் சொன்ன வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அப்பாவிடம் புகார் சொன்ன மகள்
சமூகவலைத்தளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி நம்மை மகிழ்வித்து விடும். சுட்டி குழந்தைகள் செய்யும் அட்டகாசம் நெட்டிசன்களின் மனதை கவர்ந்து விடும். அதேபோல தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அப்பா அம்மாமேலே போலீஸ் புகார் கொடுக்கணும். ஏம்மான்னு அப்பா கேட்க, அம்மா பெரிய மீனின் தலையை வெட்டி கொன்னுட்டாங்க.
சின்ன மீன் பாவம்தானே. பிறகு, சின்ன மீனையும் வெட்டி கொன்னுட்டாங்கன்னு அப்பாவிடம் சிறுமி பேசுகிறார். அதற்கு அப்பா வக்கீலை வைத்து அம்மாவை உள்ளே தூக்கி போட்டுடாலம்.. நீ மீன் குழம்பு சாப்பிட்டான்னு கேட்க, அப்பா நான் மீன் குழம்பு சாப்பிட்டேன்னு அந்த மகள் கூற அப்பா சிரித்து விடுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.