‘பத்து தல’ படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை அவமதித்த ஊழியர்- வைரல் வீடியோ
பத்து தல படத்திற்கு வந்த நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத ஊழியர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிம்புவின் ‘பத்து தல’ படம்
இன்று உலகமெங்கும் நடிகர் சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நரிக்குறவர்களை அவமதித்த ஊழியர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குறவர் இனத்தைச் சேர்ந்த 4 பேர் டிக்கெட்டுடன் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படம் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளனர்.
டிக்கெட் காண்பித்தபோது தியேட்டர் ஊழியர் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்தார்.
உள்ளே படம் பார்க்க முடியாது வெளியே போங்க என்று அந்த ஊழியர் கூறியதும்... சார்... சார்... எங்களிடம் டிக்கெட் இருக்கு... உள்ளே விடுங்க... என்று குறவர் பெண் ஒருவர் அந்த ஊழியரிடம் கெஞ்சுகிறார்.
ஆனாலும், அந்த ஊழியர் உங்களையெல்லாம் விட மாட்டோம் என்று கூறினார். இதைப் பார்த்த ஒருவர் அந்த ஊழியரிடம் சார்.. இவர்களிடம் டிக்கெட் இருக்கு... ஏன் உள்ளே விடமாட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த ஊழியரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
காசு கொடுத்து டிக்கெட் வாங்கினப்புறம் என்னடா இது @RohiniSilverScr pic.twitter.com/bWcxyn8Yg5
— Sonia Arunkumar (@rajakumaari) March 30, 2023