காலை உணவாக 10 கிலோ மிளகாய் - விசித்திர மனிதனின் வைரல் காணொளி
மேகாலயாவில் உள்ள விவசாயி ஒருவர் மிளகாய் சாப்பிட்டு பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வைரல் வீடியோ
மேகாலயாவில் எனும் பகுதி அடர்ந்த காடுகள் மற்றும் மலைப் பகுதியால் சூழப்பட்டிருக்கும். இதில் வசிக்கும் விவசாயி ஒருவர் தினமும் காலையில் 10 கிலோ மிளகாயை தனது காலை உணவாக சாப்பிட்டு வருகிறார்.
இது அவருடைய ஒரு பழக்கமாகவே உள்ளது. மிளகாய் மிகவும் காரமான ஒரு உணவு. இதை இரண்டுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது. இந்த நிலையில் இந்த விவசாயி சுமார் 10 கிலோ கிராம் காய்ந்த மிளகாய் சாப்பிடும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் அவர் முகம் முழுவதும் மிளகாய் விழுதை பூசி இருப்பதை காண முடிகிறது. மேலும் மிளகாய்ப் பொடியை 'சோப்பாக' கூட பயன்படுத்துகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் மிளகாயை சாப்பிடும் வீடியோ பரவலாகப் பரவி வந்தாலும், அவற்றை ஆதரிக்க எந்த சரிபார்க்கப்பட்ட ஆதாரமும் இல்லை.
இது ஒரு உண்மை கதையா அல்லது வெறும் வதந்தியா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த நபர் 2021ஆம் ஆண்டில் இருந்து மிளகாய் சாப்பிடும் திறமையை தன்னுள் வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |