மைக்கில் ஜாக்சன் போலவே நடனமாடி அசத்திய நபர் - வீடியோ செம்ம வைரல்
பாப் உலகத்தின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன், இவருடைய இடத்தை எவ்வளவு முயற்சி செய்தும் நிரப்ப முடியவில்லை. இவருடைய பாட்டுக்கும், இவருடைய நடனத்திற்கும் இல்லாத ரசிகர்களே கிடையாது, மைக்கில் ஜாக்சனின் அந்த மூன் வாக்கிங் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம்.
இவர் மறைவுக்குப் பின்னரும் இவரைப்பற்றி நடன உலகமே பேசிக் கொண்டுதான் இருக்கிறது. புகழின் உச்சியில் பறந்துகொண்டிருந்த மைக்கேல் ஜாக்சன் பெரிய சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறார்.
ஜூலை மாதம் 2009-ல் நடக்க இருந்த ஒரு நிகழ்ச்சிக்காக ஜூன் மாதம் 2009 அன்று தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சன் திடீரென்று காலமானார். பாப் உலகத்திற்கே ஒரு கறுப்பு தினமாக மாறியது அந்த நாள், அவருடைய இறப்புக்கு காரணம் என்னவென்று யாருக்கும் இதுவரை தெரியாது.
மைக்கில் ஜாக்சனை நினைவூட்டும் வகையில் ஒருவர் மைக்கில் ஜான்சன் போலவே நடனமாடுகிறார். இவரின் நடனத்தை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்கில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அவரின் நடன வீடியோ -