பாகிஸ்தான் மணமகளின் மயக்கும் நடனம்: வைரல் வீடியோ
சமீபத்தில் வெளியாகிய பாகிஸ்தானிய மணப்பெண்ணின் நடன காணொளியொன்று தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது.
பொதுவாகவே திருமணக் கொண்டாட்டங்களில் மணப்பெண் நடனமாடுவது தற்காலத்தில் ட்ரெண்டிங் ஆகிவருகின்றது. இது திருமணத்தின் மகிழ்ச்சி மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளை வழங்குகிறது.
இந்த வைரலான வீடியோவில், ஸ்ரேயா கோஷலின் "குலி மாதா" பாடலின் மெல்லிசை ட்யூன்னுக்கு ஒரு பாகிஸ்தான் மணமகள் சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன் நடனமாடுகிறார். இந்த நடனம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆன்லைன் பார்வையாளர்களை மயக்கும் வகையில் உள்ளது.
இந்த வீடியோ முதலில் Instagram இல் @moizsiddiquephotography பயனரால் பகிரப்பட்டடு 600,000 விருப்பங்களை பெற்றுள்ளது.
உண்மையிலேயே மனதைக் கவரும் விஷயம் என்னவென்றால், மணப்பெண்ணின் நடிப்பு எல்லைகளைத் தாண்டி, பாகிஸ்தானியர்களை மட்டுமல்லாது, இந்தியர்களின் இதயங்களையும் கொள்ளையடித்துள்ளது.
நடன அசைவுகள் அற்புதமானதாக இல்லாவிட்டாலும், வீடியோவில் தவிர்க்கமுடியாத வசீகரம் உள்ளது. இதனால் குறித்த நடனம் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |