சனி பகவானின் அபிஷேக பாலை அர்ச்சகரிடம் வாங்கி குடிக்கும் காகம்! வியந்து போன மில்லியன் பார்வையாளர்கள்
காஞ்சிபுரம் - ஊக்கல் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள சனி பகவான் கோவிலில் தினமும் காகம் ஒன்று வந்து அபிஷேக பாலை கேட்டு வாங்கி பருகும் அதிசய நிகழ்வு நடந்து வருகின்றது.
சனீஸ்வர பகவானின் வாகனம் காகம்.
பெரும்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் காகம்
இந்த கோவிலில் சனீஸ்வர பகவானுக்கும் தனியாக சன்னதி அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவானை தரிசிக்க நாள்தோறும் காக்கை ஒன்று வருகை தருகின்றது.
சுவாமி தரிசனம் செய்து விட்டு கா,கா என சத்தம் போட்டு கோவில் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்திவிட்டு செல்கிறதாம்.
இந்த அதிசய நிகழ்வை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இதனை அறிந்த பக்தர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.