நடுரோட்டில் அரங்கேறிய அடாவடித்தனம்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
மது போதையில் நான்கு பெண்கள் சேர்ந்து, ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுபோதை பெண்களின் அடாவடித்தனம்
இந்தியாவிலுள்ள மத்தியபிரதேஷ் மாநிலத்தில் நன்றாக மது அருந்திவிட்டு ஒரு பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து நடைபாதையில் வைத்து தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் நடந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதல் முற்றிய நிலையில் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் தன்னை எதற்காக அவர்கள் தாக்கினார்கள் என தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
பொலிஸாரின் விசாரணை
இதனைத் தொடர்ந்து குறித்த பெண்கள் மீது ஆபாசமான செயல், வேண்டுமென்றே பிறரை காயப்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
उड़ता इंदौर.. नशे में धुत्त लड़कियों का पब के बाहर मारपीट का वायरल वीडियो @IndoreCollector @hariips @drnarottammisra pic.twitter.com/jcSKohDEve
— Brajesh Rajput (@brajeshabpnews) November 7, 2022