Viral Video: 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனைவிக்காக ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல்
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
Asish Matthew இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று உண்மையான காதலை இளம்தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டுவதாய் அமைந்திருக்கிறது.
பெங்களூருவின் இந்திரா நகரில் முதியவர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவில் பூக்களை அழகாக அடுக்கி வைப்பதை கவனித்துள்ளார்.

மிக கவனத்துடனும் நேசத்துடனும் பூக்களை ரசித்தபடி அடுக்கி வைக்கிறார், இதனை கவனித்த Asish Matthew அவர் அருகில் சென்று பேசுகிறார்.
அதற்கு முதியவர், தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை காண்பிக்கிறார், 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டாலும் மனைவியின் நினைவுகளால் வாழும் முதியவர் தினமும் காலை பூக்களை மனைவியின் புகைப்படத்திற்கு அருகில்வைத்து விடுகிறார்.
ஆட்டோ முழுதும் மனைவியின் புகைப்படங்களை சுமந்தபடி, அந்த இடத்தையே நினைவிடமாக மாற்றியமைத்துள்ளார்.
இவருக்கு மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும் மனைவி தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே எண்ணுகிறாராம்.
தினந்தோறும் புதிய மனிதர்களை சந்திப்பது உற்சாகத்துடன் கவலைகளை மறக்க உதவுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாக பலரும் அவரது காதலை வியப்புடன் பார்க்கின்றனர், ஆதரவாக கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
