மலைப்பாம்பு உரிமையாளருக்கு நேர்ந்த கதி! வைரலாகும் வீடியோ பதிவு
பெண்ணின் கையைக் கடித்து, மலைப்பாம்பு சுற்றி வளைத்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
வைரல் வீடியோ
வளர்ப்பு பிராணிகளாக சிலர் நாய், பூனைகளை வளர்ப்பதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் பாம்பு போன்ற ஊர்வனவற்றை சிலர் வளர்ப்பு பிராணிகளாக வளர்ப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
அந்தவகையில், மலைப்பாம்பு ஒன்றை கண்ணாடி பெட்டிக்குள் வளர்த்து வந்த பெண் ஒருவர், பெட்டியின் மூடியை அகற்றி, அதனை வெளியே எடுக்க முயற்சித்தார்.
அப்போது வெளியே சீறியபடி வந்த மலைப்பாம்பு, அவரை கையில் கடித்து, சுற்றி வளைத்தது. வலியில் துடித்த அந்த பெண்ணை காப்பாற்ற, மற்றொரு நபர் முயற்சித்து காபாற்றியுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Snake attacks owner as she tries to take it out of cage ?? pic.twitter.com/auVgWTttQ8
— Daily Loud (@DailyLoud) October 23, 2022