நடக்க இடம் இல்லை.. அதனால் ஸ்பைடர்மேனாக மாறிய இளைஞர்
ஓடும் ரயிலில் தனது சீட்டிற்கு செல்ல, இளைஞர் ஒருவர் அங்கிருந்த கம்பிகளை பிடித்தபடி தொங்கிக் கொண்டே பயணிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
பொது போக்குவரத்து
பொதுவாக இந்தியா போன்று மக்கள் தொகை அடர்ந்த நாடுகளில் பொது போக்குவரத்து என்பது சிரமமான காரியமாக காணப்படுகிறது.
இது போன்ற நாடுகளில் பண்டிகை நேரங்களில் வெளியே செல்வது என்பது மிகவும் கடினமான விடயமாகும்.
வைரல் வீடியோ
இதன்படி தற்போது வீடியோவில், ரயில் ஒன்றின் நடைபாதையில் பயணிகள் படுத்திருக்கிறார்கள். அவர்களை தாண்டிச் செல்வது சிரமம் என நினைத்த ஒரு இளைஞர், ரயிலின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பிகளை பிடித்து தொங்கியபடி, அடுத்தடுத்த கம்பிகளுக்கு தாவிச் செல்கிறார்.
தனது இருக்கைக்கு செல்ல, கம்பிகள் வழியே ஸ்பைடர் மேன் போல பயணிக்கும் இந்த இளைஞரது செயலை கண்டு சக பயணிகள் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் போது எடுக்கபட்ட வீடியோவை "இந்தியாவில் ஸ்பைடர்மேன்" எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்கள். மேலும் இதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
स्पाइडरमैन भारत में। pic.twitter.com/5QNjJ8OzfP
— Professor ngl राजा बाबू ?? (@GaurangBhardwa1) October 13, 2022