சுமார் 32 வருடங்களுக்கு பின் ஆசிரியையை பார்த்த மாணவி செய்த காரியம்: மனம் உருக்கும் சம்பவம்
தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
பள்ளி பருவம்
பொதுவாக நமது அனைவரின் வாழ்க்கையிலும் பள்ளி பருவம் என்பது மறக்க முடியாத விடயமாகும். அதில் சிலருக்கு விருப்பமான ஆசிரியர்கள் இருப்பார்கள்.
இதன்படி விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தில் பயணிகளின் முன் செய்த விடயம் பார்ப்பவர்களை மனம் உருக வைத்துள்ளது.
விமான பணிப்பெண்ணொருவர் இவர் இருக்கும் விமானத்தில் 32 வருடங்களுக்கு முன்பு அவருக்கு கற்பித்த ஆசிரியை ஒருவரைக் பார்த்துள்ளார்.
வைரல் பதிவு
அப்பொழுது பெரும் மகிழ்ச்சியில் மைக் எடுத்து, “என்னுடைய பெயர் லோரி, 1990 ஆம் ஆண்டு தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியையை தற்போது மீண்டும் இந்த விமானத்தில் சந்தித்துள்ளேன்.
மேலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியை, அவரை 32 ஆண்டுகளாக பார்க்கவில்லை, அந்த ஆசிரியை தான் தனக்கு பியானோ வாசிக்க கற்றுத் தந்தார், நான் இப்போது பியானோ மாஸ்டர் முடித்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேசியது மட்டுமின்றி அவருடைய இருக்கைக்குச் சென்று ஆசிரியையை கட்டித்தழுவியுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.