ஸ்கிப்பிங் கயிறு போல சிறுவன்! மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ
சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்தி, ஒரு நிமிடத்தில் 57 முறை ஸ்கிப் செய்த குழுவினரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாதனை
இங்கிலாந்தை சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று, குழுவிலுள்ள சிறுவனை பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 57 முறை ஸ்கிப் செய்து உலக சாதனை படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கின்னஸ் அமைப்பு, சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோவில், இரு குழுக்கள் ஒரு நிமிடத்தில் அதிக முறை மனிதர்களை வைத்து ஸ்கிப் செய்வது யார் என்ற போட்டியில் களமிறங்கின.
இருகுழுக்களும் போட்டி போட்டு சிறுவர்களை வைத்து ஸ்கிப்பிங் விளையாடியதில், இங்கிலாந்தை சேர்ந்த அக்ரோபொலிஸ் அணி 57 முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியா இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
The cheapest skipping rope is a human one...
— Guinness World Records (@GWR) October 21, 2022
Which team can get in the most skips in one minute? pic.twitter.com/6GJWsj9nAN