குடிநீருக்காக இத்தனை போராட்டமா? சகதியில் சிக்கித்தவித்த முதியவர்!
குடிநீர் எடுக்கச் சென்ற முதியவர் ஒருவர் அங்குள்ள சதுப்புநிலச் சகதியில் மாட்டிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்திலுள்ள கென் ஆற்றங்கரையில் குடிநீர் எடுக்கச் சென்ற முதியவர் ஒருவர் அங்குள்ள சதுப்புநிலச் சகதியில் மாட்டிக்கொண்டுள்ளார். இதனை பார்த்த கிராமவாசிகள் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு முதியவரை மீட்டுள்ளனர்.
வைரல் வீடியோ
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் சதுப்புநிலச் சகதியில் இடுப்பு அளவுக்குச் சிக்கிக்கொண்டு தவிக்க, ஒருவர் மரக்கொம்பை முதியவரிடம் கொடுத்து அவரை மீட்க முயல்கிறார்.
சகதியில் மாட்டிக்கொண்ட முதியவரின் அருகில் அவர் தண்ணீர் பிடிக்க எடுத்துவந்த குடமும் கிடக்கிறது. அதோடு முதியவரைக் காப்பாற்றும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதனை காவலர் ஒருவர் சிரித்துக்கொண்டே தன் மொபைலில் வீடியோ பதிவுசெய்கிறார்.
காவலரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
महज पीने के पानी के लिए इतनी मशक्कत...
— Nitesh Ojha (@niteshojha786) October 8, 2022
उत्तर प्रदेश वाले हमीरपुर के गऊघाट गांव का पानी खारा है. अन्य कोई स्त्रोत नहीं है, इसलिए वर्षों से गांव वाले पास से गुजरने वाली केन नदी से पीने का पानी लाने के लिए मजबूर हैं. #UttarPradesh #WaterCrisis pic.twitter.com/FjCbmNTEqa