பள்ளி பேருந்தில் பதுங்கியிருந்த ராட்சத பைத்தான்! பீதியை கிளப்பும் வீடியோ பதிவு
பள்ளி பேருந்து சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த ராட்சத பைத்தான் மீட்கும் வீடியோ பார்வையாளர்களை வியப்படைய வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில், தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ராட்சத பைத்தான் பாம்பை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ராட்சத பைத்தான்
ரேபரேலியில், பள்ளி விடுமுறையை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்தினுள், ஆட்டை விழுங்கிய ராட்சத பைத்தான் சீட்டிற்கு அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், சுமார் ஒருமணிநேரம் போராட்த்தின் பின்னர் ராட்சத பைத்தானை பத்திரமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A python rescued from a school bus in Raibareli, #UttarPradesh #Viral #ViralVideos #india pic.twitter.com/EP1P1mEFAK
— Siraj Noorani (@sirajnoorani) October 16, 2022