குழந்தையாக மாறி உற்சாக விளையாட்டு! கமெராவில் சிக்கிய யானையின் கியூட் காட்சி
சிறுவர் பூங்காவில் குழந்தைபோல் டயர்களுக்கு நடுவே புகுந்து உற்சாகமாக விளையாடிய காட்டு யானையின் வீடியோ தற்போது இணையவாசிகளிடம் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வைரல் வீடியோ
தற்போது இணையத்தில் பல வீடியோக்கள் இது போன்று தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். வேடிக்கைக்காட்டி பிரபலமாகுவதில் முதல் இடத்தை விலங்குகள் பிடிக்கிறது.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நரேங்கி ராணுவ கண்டோன்மெண்ட் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் யானை ஒன்று குழந்தைபோல் விளையாடி கொண்டிருக்கிறது.
உணவு தேடி வந்த யானை பூங்காவில் சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடுவதற்காக கட்டி இருந்த டயர்களுக்கு நடுவே புகுந்து முன்னும் பின்னும் விளையாடிய காட்சி செல்போனில் படமாக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் பகிரப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
A wild #elephant entered the #Children's Park inside the #Army Cantonment Area in #Guwahati city. The elephant was seen having #fun with the children's swing. pic.twitter.com/0UoON4SskE
— Himanshu Purohit (@Himansh256370) October 17, 2022