ஆபத்தில் உதவி ஹீரோவான ஆடு..... பதறி அடித்து ஓடிய பருந்து! மில்லியன் பேர் பார்த்த காட்சி
புத்திசாலித்தனமாக ஒரு நிமிடத்தில் சிந்தித்து ஹீரோவான ஆடு குட்டி ஒன்றின் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
விலங்குகள் புத்திசாலித்தனமானது என்று நமக்கு தெரியும். எனினும் அவற்றை திரைப்படங்களில் தான் அதிகம் பார்த்திருப்போம்.
நிஜ வாழ்க்கையில் காண்பது சற்று அரிது.
ஆனால் அதற்கு எடுத்து காட்டாக இணையத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
நெதர்லாந்து நாட்டில் பண்ணை ஒன்றில் கோழிகளும், ஆடுகளும் ஒன்றாக இருக்கின்றது.
இதில் ஒரு கோழி கூண்டில் இருந்து வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தபோது திடீரென பருந்து ஒன்று கோழியை தூக்கிச் செல்ல முயற்சித்தது.
கோழி பருந்தின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. இதை யதார்த்தமாகப் பார்த்த ஆடு ஓடியே வந்து, பருந்தை தன் கொம்பால் குத்தி கோழியைக் காப்பாற்றியது.
ஆட்டின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பருந்து நொடிப்பொழுதில் ஏமாற்றத்துடன் பறந்து போனது.