மகனை காவல் துறை அதிகாரியாக உயர்த்திய Single Mother - சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட செல்வி அம்மா!
சிங்கிள் மதராக எண்ணற்ற சவால்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி கண்ட பாண்டிச்சேரியைச் சேர்ந்த 54 வயதுடைய செல்வி அம்மா, இன்று தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார்.
கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் மனம் தளராமல், ஒற்றை ஆளாகப் போராடி தனது மகனை காவல் துறை அதிகாரியாக உயர்த்திய அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

அவரது அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் மகத்தான சாதனையைப் பாராட்டும் விதமாக, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ‘Mothers of India Awards 2026’ விழாவில் செல்வி அம்மா சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்.
அந்த மேடையில் அவர் பகிர்ந்துகொண்ட மனதை நெகிழவைக்கும் வாழ்க்கை அனுபவங்களையும், வெற்றிப் பயணத்தின் உணர்வுபூர்வமான தருணங்களையும் முழுமையாக இந்தக் காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |