குழந்தை பிறந்து இரண்டு மாதத்தில் ஷீட்டிங்கில் பிஸியாகிய சீரியல் நடிகை!
குழந்தை பிறந்து சரியாக இரண்டு மாதத்தில் சீரியல் நடிகை திவ்யா மீண்டும் ஷீட்டிங்கிற்கு சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மீடியா பயணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் “செவ்வந்தி” சீரியில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.
திவ்யா, தன்னுடன் இணைந்து நடித்த அர்ணவ்வை என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சிறிதுக் காலம் சென்றதும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம் கூறியிருக்கிறார்.
அர்ணவ் “ குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஷீட்டிங்கிற்கு குழந்தையுடன் சென்ற பிரபலம்
இந்த நிலையில், நடிகை திவ்யாவிற்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.
இவர் குழந்தை பிறந்தவுடன் அவரின் ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் பல தடங்கள் வந்தாலும் எப்போதும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இரண்டு மாதக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஷீட்டிங்கிற்கு சென்ற வீடியோவை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ உங்களின் வாழ்க்கை இனியாவது நன்றாக அமையட்டும்.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.