இறந்து போன காதலிக்கு காதலன் செய்த காரியம்!
தன்னுடைய காதலியை திடீர் மரணமடைந்தால் காதலன் செய்த காரியம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலி மரணம்
இலங்கையில் மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணும் இளைஞரும் சுமார் 10 வருடக்காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் நீண்டக்காலமாக காதலித்து வந்தால் விரைவில் திருமணம் செய்யவிருந்தனர். இந்நிலையில் குறித்த பெண் நேற்று முன் தினம் திடீரென மரணமடைந்துள்ளார்.
இவரின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத அவருடைய காதலன் காதலியின் ஆசையை இறுதி நேரத்தில் நிறைவேற்றியுள்ளார்.
இதனை அப்பகுதியிலிருந்த மக்கள் பல தடவைகள் தடுக்க முயன்றும் குறித்த இளைஞர் தாலிக்கட்டியுள்ளார்.
இந்த சம்பவம் பல இடங்களில் நடந்தாலும் இலங்கையை பொருத்தமட்டில் இதுவே முதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
கண்கலங்க வைத்த வீடியோ காட்சி
திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் உயிரிழந்த தனது காதலிக்கு தாலி கட்டி அவரை சுமங்கலியாக வழியனுப்பிவைத்துள்ளார். குறித்த இளைஞனின் இச் செயலானது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்த இளைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், அவரின் வீடியோ காட்சியை வைரலாக்கி வருகிறார்கள்.