34 வயதிலும் ரசிகர்களை கிரங்கடிக்கும் அழகில் அஞ்சனா!
நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது?என தொகுப்பாளினி அஞ்சனாவை ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அஞ்சனா. இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகர் சந்திரன் என்பவரை 2016 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது இவர் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக உள்ளார். அந்த வகையில் இவர் அவ்வப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் தனது இன்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
இப்போது வெளியாக இருக்கும் ஷைரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இவர் கலந்து கொண்டுளார்.
அப்போது இவர் அணிந்திருந்த உடையுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் தற்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் 'மிவும் அழகாக இருக்கிறீர்கள்' ,'தேவதை போல இருக்கிறீர்கள்' என தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு ரசிகர் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது? என கேள்வி எழுப்பி உள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |