வெள்ளித்திரை நாயகி ரேஞ்சுக்கு களமிறங்கிய முல்லை! எந்த சீரியலில் நடிக்க போகிறார் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக இருந்த காவியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் ஆரம்பித்த காலத்திலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
இதனை தொடர்ந்து இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் தற்கொலைக்கு பின்னர் சற்று சரிவை சந்தித்தது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை என்றால் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக பார்க்கப்பட்டது.
பின்னர் சித்ராவின் இடத்தை பிடிக்க யாராவது வரமாட்டார்கள் என்று ஏங்கி கொண்டிருக்கும் போது காவியா முல்லையாக வந்தார்.
கலக்கல் புகைப்படங்கள்
இந்த நிலையில் இவரை மக்கள் முல்லையாக ஏற்று கொள்ளும் போது இவர் சீரியலை விட்டு விலகியுள்ளார்.
இதற்கு தான் மேலதிகமாக படிக்க போவதாக கூறியிருந்தார். ஆனால் இவர் வாய்ப்பிற்காக மாடலிங் செய்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
அந்த வகையில் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரின் புகைப்படங்களை பார்க்கும் போது இன்னொரு சீரியலில் கதாநாயகியாக நடிக்க காத்திருப்பது போன்று விளங்குகிறது.
இதன்படி, தற்போது சல்வாரில் கலக்கலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த நெட்டிசன்கள், “இவர் பேசாமல் இந்த சீரியலிலே இருந்திருக்கலாம்”என கமண்ட் செய்து வருகிறார்கள்.