ஐயப்பனை காண மலையேறப்போகும் பிரபலம்! ஆவலுடன் பகிர்ந்த பதிவு..
பிரபல நடிகையான நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து மலையேறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
கடந்த சுமார் 7 வருடங்கால காதலித்து கடந்த ஜீன் மாதம் திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவன்.
இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருவரும் ஹனிமூன் சுற்றுப்பயணத்தில் சுமார் 4 மாதக்காலமாக இருந்தனர்.
மேலும் நான்கு மாதங்களின் பின்னர் இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்கள்.
இது தொடர்பான பல பிரச்சினைகள் எழுந்தாலும் அதற்கான உரிய ஆதாரங்களை அதிகாரிகளிடம் கொடுத்து பிரச்சினையை நிறைவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் சமூக வலைத்தள பக்கங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் விக்னேஷ் சிவன் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விடயங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவேற்றுவார்.
இதன்படி, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஐயப்பன் மாலை அணிந்து ஐயப்பன் தரிசனத்திற்காக கேரளா சென்றுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், சுவாமியே சரணம் ஐயப்பா, உன்னை காண ஆவலுடன் வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் வேண்டுதல் பழிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும் சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.