ட்ரம்ப் போல் முகம்கொண்டிருப்பதால் உயர் தப்பிய எருமை!
டொனால்ட் டிரம்ப்பை ஒத்திருப்பதால் இணையத்தில் வைரலான ஒரு எருமை, ஈத் பலியிடுதலில் இருந்து மீட்கப்பட்டு பங்களாதேஷின் தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் தோற்றத்தை ஒத்த எருமை
ஏறக்குறைய 700 கிலோ எடை கொண்ட அந்த விலங்கின் தனித்துவமான வெள்ளை நெற்றிப் பகுதி மற்றும் சீவப்பட்ட முடி அமைப்பு ஆகியவற்றைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, ஈத் அல்-அதா பண்டிகைக்கு முந்தைய நாட்களில் அது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது.

பார்வையாளர்கள் உடனடியாக அதற்கு "டொனால்ட் டிரம்ப் எருமை" என்று பெயரிட்டனர், மேலும் அதன் காணொளிகள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றன.
அதன் பின்னர் நாராயண்கஞ்ச் பகுதியில் ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த அல்பினோ என்ற அந்த எருமை, ஈத் பண்டிகைக்காக விற்கப்பட்டதாக செய்தி வெளியானது.

தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் போன்ற முகத்தோற்றம் கொண்ட எருமை மீட்கப்பட்டு, தேசிய உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுள்ளது.
அந்த விலங்கைப் பாதுகாக்கவும், பார்வையாளர்கள் அதைப் பாதுகாப்பாகப் பார்க்க ஒரு வாய்ப்பை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
#Watch | People gather to see the viral albino buffalo with blond locks, nicknamed 'Donald Trump,' before it is sacrificed as part of the Eid al-Adha festival's 'Qurbani' ritual. pic.twitter.com/jrzX8go4LJ
— NDTV (@ndtv) May 26, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |